கருவாட்டுக்குள் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கற்பிட்டியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.