ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில், 27 வயதுடைய கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபர், பலமுறை தகாத முறையில் அவரைத் தொட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் ஓப்பன் டாக்
கோடீஸ்வரரான கருணா! மகிந்தவிடம் கருணாவின் மனைவி நிராவின் ஓப்பன் டாக்
சரீரப் பிணை
பேருந்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில், அவரை தலா ரூ. 200,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.