தோழர் அநுரகுமாரவின் அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி ஆகிவிட்டது. இப்போது முஸ்லிமாக இருப்பதினால் ஏதாவது இடையூறு உள்ளதா..? நெஞ்சைத் தொட்டு கேளுங்கள். பள்ளிவாசலுக்கு சென்று அல்லாஹ்விடம் கேளுங்கள். ரமழான் மாதத்தில் முஸ்லீம்கள் நோன்பு பிடிப்பார்கள். அந்த காலத்தில் தமிழர்களே பௌத்தர்களும் இந்த விடயத்தை செய்ய மாட்டார்கள். அதாவது ஒற்றுமையாக இருப்பது என்பது ரமழான் மாதத்தில் முஸ்லீம் மக்களை போன்று தமிழ் மக்களும், பௌத்த மக்களும் அந்த காலத்தில் நோன்பு பிடிப்பது அல்ல. பௌத்தர்கள் வெசாக் கூடு தயாரிப்பார்கள். அதாவது ஒன்று சேர்தல் என்பது பௌத்தர்கள் முஸ்லிம்கள் வெசாக் காலத்தில் வெசாக் கூடு தயாரிப்பது தீபாவளியாக இருக்கட்டும், தைப்பொங்கலாக இருக்கட்டும், தமிழ் மக்கள் பல்வேறுபட்டு விடயங்களை மேற்கொள்வார்கள் நாங்களும் பொங்கல் போய் சாப்பிடுவது தான். ஆனால் பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் முற்று முழுதாக பொங்கல் தினத்தினை போய் நடத்த மாட்டோம். ஆனால் நாங்கள் மனிதர்களாக ஒன்றுபடுவோம். நாங்கள் இளைஞர்களாக ஒன்றுபடுவோம் . இலங்கையர்களாக எங்களுடைய கலாச்சார விழுமியங்கள் வேறுபாடுகள் அவ்வாறே இருக்கின்றது. அதனாலே தான் எங்களது ஒற்றுமைகளை வேற்றுமைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே தான் இவ்வாறான நாட்டினை நீங்கள் அனைவரும் உருவாக்கி இருக்கிறீர்கள். ஆகையினால் நாங்கள் இறுதியாக சொல்லப்போவது என்ன, இந்த நாட்டில் தேசிய ஒற்றுமை என்ற பாலத்தினை உருவாக்குவதை விட வேறு எந்த பாலத்தை உருவாக்க முடியும்..?
மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்த கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.