கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகம பகுதியிலுள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலத்துக்கருகில் சடலம் ஒன்று மிதந்தவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தவரா அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தவரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேபோல் பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை முகாமுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்தவாறு காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பார்பர் வத்த, குன்னேபான பகுதியைச் சேர்ந்த 63 வயதானவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.