மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச, அரசாங்கத்தினால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட வாகனத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. R