ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற முடிவு

 

​ஐக்கிய தேசியக் கட்சி (UNP), சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

​ஆரம்பகட்ட கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்களுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

​இந்த ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க, ஒரு குழு அல்லது அது போன்ற ஒரு பொறிமுறையின் மூலம் செயல்படவும் கட்சி உத்தேசித்துள்ளது. அண்மைக் காலமாக, பொதுவான பிரச்சினைகளில் ஒத்துழைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

​அந்த கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த கட்சி உறுதியாக இருப்பதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் வெளிப்படையாகவும், கூட்டாகவும் இணைந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்