தாண்டியடி மருத்துவ முகாமில் பல்வேறு சேவைகள்... சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.


(றியாஸ் ஆதம்,

றாசிக் நபாயிஸ்)


கிழக்கு மாகாண மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் (2025.09.14) ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த தினம் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை இடம்பெறவுள்ள இம்மருத்துவ முகாமில்...

💥வெளிநோயாளர் (OPD) மருத்துவ சேவைகள்.


💥விஷேட வைத்திய நிபுணர்களின் சேவைகள்.

💥பல் பரிசோதனை மற்றும் பற்சிகிச்சைகள்.

💥கட்டரக்ட் சேர்ஜரி

(கண் சத்திர சிகிச்சை) தொடர்பான சேவைகள்.

💥காதுப் பரிசோதனைகள்.

💥பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு காது கேட்கும் கருவி வழங்குதல்.

💥தொற்று மற்றும் தொற்றா நோய் பரிசோதனைகள்.

💥பாலியல் நோய் தொடர்பான பரிசோதனைகள்.

💥காசநோய் தொடர்பான பரிசோதனைகள்.

💥இரத்தப் பரிசோதனைகள்.

💥ஆயுர்வேத சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகள்.

💥பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்குதல்.

💥விஷேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள், நடைப் பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்.

💥மருத்துவ ஊக்கத் தொகை கொடுப்பனவுகள்.

💥நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கொடுப்பனவுகள்.

💥சிறுவர் பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகள்.

💥சட்ட ஆலோசனைகள்.

💥சுகாதாரக் கல்வி உட்பட விழிப்புணர்வு நிகழ்வுகள் உள்ளிட்ட மேலதிக சேவைகளையும் வழங்குவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நலன்கருதி பிரத்தியேகமாக போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் பிரதேச மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#பிராந்திய #சுகாதார #சேவைகள் #பணிமனை,

#கல்முனை.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்