(ந.சந்திரகுமார் SLPS )
(Pictures AI)
எந்தவொரு அரச ஊழியர்களும் 20 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்த பின்னரே ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியைப் பெற்றுக் கொள்வர்.
பெண் பொலிசார்,மருத்துவ மாது, தாதியர், ஆசிரியைகள், பெண் சிறைச்சாலை ஊழியர்கள் ஆகியோர் 20 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்த பின் , ஓய்வு பெற்ற தினத்தில் இருந்து ஓய்வூதியத்தைப் பெறலாம்.
அதேவேளை ஆண் அரச ஊழியர்கள் 20 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்த பின் ஓய்வு பெறலாம்.எனினும் 55 வயதைப் பூர்த்தி செய்த பின்னரே ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும் 30 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள், அடிப்படைச் சம்பளத்தில் 85% ஐ குறைக்கப்படாத ஓய்வூதியமாக/ 75% ஐ குறைக்கப்பட்ட ஓய்வூதியமாகப் பெறலாம். அத்துடன் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 6,025/-யும் பெற்றுக் கொள்ளலாம்.
*உதாரணமாக 79,795/-அடிப்படைச் சம்பளம் பெறும் ஒருவர், 75% குறைக்கப்பட்ட ஓய்வூதியமாக -59,846.25 வையும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக -6.025/- யும் சேர்த்து, 65,871.25 வை மாதாந்த ஓய்வூதியமாகப் பெறலாம்.
*உதாரணமாக 79,795/- அடிப்படைச் சம்பளம் பெறும் ஒருவர், 85% குறைக்கப்படாத ஓய்வூதியமாக 65,567/- வையும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 6,025/- யும் சேர்த்து, 70,900/- வை மாதாந்த ஓய்வூதியமாகப் பெறலாம்.
மேலும் குறைக்கப்பட்ட ஓய்வூதியமாக 75%பெறும் ஒருவர், 24 மாதகால குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தை , பணிக் கொடையாக 1,436,310.00 ஐப் பெற்றுக் கொள்ளலாம்.
*24 மாதங்கள் × 59,846.25= 1,436,310 வை பணிக் கொடையாகப் பெறலாம்.
*அட்டவணை -1, சேவைக் காலத்தின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய ஓய்வூதிய சதவீதத்தை கணிக்க முடியும்.
*அட்டவணை -2 , சேவைக் காலத்தின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய பணிக் கொடையின் சதவீதத்தை கணிக்க முடியும்.
*உதாரணமாக 20 வருடச் சேவைக் காலத்தை பூர்த்தி செய்த ஒருவர்,65% குறைக்கப்படாத ஓய்வூதியத்தையும்,55% குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தையும் பெற முடியும்.
அதேவேளை 10 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்து, முறைப்படி ஓய்வு பெற்ற ஒருவர், 55 வயதைப் பூர்த்தி செய்த பின், ஓய்வூதியத்தைப் பெறலாம்.