இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும்

 

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரால் பரவுவதாகவும், தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை காலத்தில் சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக வயல் நிலங்களுக்கு செல்வதால் இந்நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் தீபால் தெரிவித்துள்ளார். 


காய்ச்சல் ஐந்து அல்லது ஆறு நாட்கள் நீடித்தால், அது எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்க வேண்டும் எனவும், கண்களில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறம், வயிற்று வலி, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும் எனவும் அவர் விளக்கினார்.



சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் சேற்று நீர் மற்றும் மாசடைந்த பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்