நீதித்துறை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை சோதனையிட தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு அனுமதி


காலாண்டிற்கும் ஒரு தடவை நீதித்துறை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை சோதனையிடுவதற்கு தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக மேல் நீதிமன்ற வளாகங்களில் சோதனைகளை மேற்கொள்ள இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் வௌியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையாக துப்பரவு செய்யப்படாமையால் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் தகவல் வௌியாகியுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை முறையாக பராமரிப்பது அதிகாரிகளின் கடமையென நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் தெரிவித்துள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்