குற்றப்புலனாய்வு துறையின் அழைப்பாணை பெறுவதற்கு முந்தைய தினம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூரை கொழும்பில் உள்ள ஓர் உணவகத்தில் சந்தித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது.
எதிர்வரும் இந்திய பொதுத் தேர்தலில் ராகுல் காந்தியை மாற்றி, தரூரை அடுத்த வேட்பாளராக நிறுத்தும் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில், இந்த ரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.