வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக எம்.ஏ.சுமந்திரன்
எதிர் வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக வருவதற்கு தீர்மானித்துள்ளேன்.
இருந்த போதிலும் கட்சியிடம் எனது விருப்பத்தை தெரிவிக்கவுள்ளேன்.
கட்சியின் முடிவுகளுக்கு அமைவாக இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார் சுமந்திரன்