ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதன் ரகசிய இடங்கள் பற்றிய தகவல்களை ரஷ்யா, இஸ்ரேலுக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தெஹ்ரான் விசாரணையைத் ஆரம்பிக்க உள்ளதாக ஈரானிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரஷ்யா "முன்னோடியில்லாத துரோகத்தை" செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மையங்களையும் துல்லியமாக மறு பகுப்பாய்வு செய்ய வேண்டும். தெஹ்ரானுக்கும், மாஸ்கோவிற்கும் இடையிலான ஒரு மூலோபாய கூட்டணி பற்றிய பேச்சு "பொய் மற்றும் ஏமாற்று" என்பதைத் தவிர வேறில்லை என்றும், ஈரானிய அதிகாரிகள் வெளியிட்ட கூற்றுக்களை அந்நாட்டு ஊடகங்கள் பதிவேற்றியுள்ளன