அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில்... இலங்கையை சேர்ந்த ரத்நாயக்க, சுவிஸலாந்தை சேர்ந்த அலக்சான்டா பேகே முதலிடம்

 





அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில்...

 இலங்கையை சேர்ந்த ரத்நாயக்க, சுவிஸலாந்தை சேர்ந்த அலக்சான்டா பேகே முதலிடம்

(றியாஸ் ஆதம், ஏ.எல்.எம்.சினாஸ்,எம்.எம்.ஜபீர்)

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் 21.1கிலோமீற்றர் போட்டி நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்நாயக்க முதலாமிடத்தினையும், இலங்கையைச் சேர்ந்த கலன விஜயவிக்ரம இரண்டாமிடத்தினையும், ஜேர்மனியை சேர்ந்த மெதிஸ் அடம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

பெண்கள் பிரிவில் சுவிஸலாந்தைச் சேர்ந்த அலக்சான்டா பேகே முதலாமிடத்தினையும், நெதர்லாந்தைச் சேர்ந்த லியோனி இரண்டாமிடத்தினையும், சுவிஸலாந்தைச் சேர்ந்த எலினா மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி இன்று (10) பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என சுமார் 350 பேர் கலந்துகொண்ட குறித்த மரதன் ஓட்டப்போட்டியானது 21.1கிலோமீற்றர் அரை மரதன், 10கிலோமீற்றர் மற்றும் 5கிலோமீற்றர் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது. 

இதன்போது இடம்பெற்ற 10கிலோமீற்றர் மரதன் ஒட்டப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த ரீ.டபள்யூ.எரந்த தென்னகோன் முதலாமிடத்தினையும், பெண்கள் பிரிவில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த நிகோல் ரெட்லீ முதலாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் நசீல், பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.மாபிர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நித்தின் ரணவக்க, சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எப்.உவைஸ் உட்பட பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

குறித்த மரதன் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றுதழ்களுடன் பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்தப் போட்டியானது ABAY HOLIDAYS யின் பூரண அனுசரணையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்