அமெரிக்காவின் தீர்வை வரி குறைப்பு! இலங்கைக்கு கிடைத்துள்ள பாரிய வெற்றி

 

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரியை இன்னும் குறைத்துள்ளது.

ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தீர்வை வரியை அண்மையில் அதிகரித்து அறிக்கை வெளியிட்டது.

தீர்வை வரி

அதன் பிரகாரம் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்ட போதும், ராஜதந்திர நடைமுறைகள் மூலம் குறித்த வரி பின்னர் 30 வீதமாக குறைக்கப்பட்டது.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் தொடர் முயற்சிகள் காரணமாக குறித்த வரி தற்போதைக்கு இன்னும் குறைக்கப்பட்டு, 20 வீத தீர்வை வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரி விதிப்பு இம்மாதம் 07ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்