களுவாஞ்சிக்குடியில் 14 இலட்சம் பெறுமதியான தொலைத்தொடர்பு கோபுர பற்றரிகளுடன் இருவர் கைது

 


களுவாஞ்சிக்குடியில் 14 இலட்சம் பெறுமதியான தொலைத்தொடர்பு கோபுர பற்றரிகளுடன் இருவர் கைது

14 இலட்சம் பெறுமதியான 44 தொலைத்தொடர்பு கோபுர பற்றரிகளுடன் இருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்டுள்ள பற்றரி ஒன்றின் பெறுமதி சுமார் 30,000 என பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியபோரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து திருடப்பட்ட 24 பற்றரிகளும் சம்மமாந்துறை தொலைதொடர்பு கோபுரங்களிலிருந்து திருடப்பட்ட 20 பற்றரிகளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களுவாஞ்சுக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்