போதையில் தள்ளாடிய ஐந்து மாணவிகள்



 பிரபல்யமான   பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில்  மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இம் மாணவிகளில் இரு மாணவிகளே இந்த போதைப்பொருள் மாத்திரிகைகளை மட்டக்குளிய  பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஒர் நபரிடம் அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்தது.

மேற்படி மாணவிகள் 2 குளிசைகள் பின்னர் 3 குளிசைகளை பாடசாலையின் கழிவறைக்குச் சென்று இதை அருந்துவது தெரியவருகின்றது.

இது தொடர்பில் பாடசாலையின் அதிபர், மருதானை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் இம் மாணவிகள் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்