மத்திய கிழக்கில், பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதுதான் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள மெக்ரோன், இங்கிலாந்து நாடாளுமன்ற அவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, உலகளாவிய மோதல்கள் குறித்து பேசிய மெக்ரோன், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்
அரச மரியாதை
அத்துடன், சர்வதேச ஒழுங்கை உக்ரைன் தொடர்ந்து பாதுகாப்பார்கள் எனவும் ஒருபோதும் உக்ரைனை நாம் கைவிட கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கால்வாயைக் கடக்கும் சிறிய படகுகள் தொடர்பாக உரையாற்றிய மெக்ரோன், சட்டவிரோத நுழைவுகளைத் தடுப்பது இரண்டு நாடுகளின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனக்கு அளிக்கப்பட்ட அரச மரியாதைக்காக மன்னர் சார்லஸுக்கு மெக்ரோன் நன்றி தெரிவித்தார்.
இறுதியாக, 'பிரித்தானியா வாழ்க', 'பிரான்ஸ் வாழ்க' என்று கூறி தனது உரையை அவர் நிறைவு செய்தார்.