பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் நீக்கப்படும்! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி


 இலங்கையில் 1979 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

முழுமையாக இரத்துச் செய்யப்படும்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது.

இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காகக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன.

அந்தவகையில் செப்டெம்பர் மாதமளவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.

கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என்பவற்றைப் பாதுகாக்கும் வகையிலும், சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலுமே புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்க்கின்றோம்.

பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் இருந்த விமர்சனங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும். அதேவேளை, நூதன பூகோல பயங்கரவாதத்துக்கு முகம் கொடுப்பதற்குரிய சட்டப் பாதுகாப்பு கவசமும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும்  என்றார்




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்