ஶ்ரீலங்கன் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு


 விமான கொள்முதல் முறைகேடு விசாரணையில் கைது


ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவின் விளக்கமறியல் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


இன்று  கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் ஆஜரான சந்தேகநபரை ஜூலை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


விமான கொள்முதல் ஒப்பந்தங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இடம்பெற்று வரும் விசாரணையின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) நிஷாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.


அவரின் தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய நிதி முடிவுகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்