பொத்துவில் அறுகம்பேயில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை
பொத்துவில் அறுகம்பேயில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை
(ஆதம்)
கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்களின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திலுள்ள விடுதிகள், உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் அவர;ளின் வழிகாட்டலின் கீழ் நேற்று (24) இத்திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை லேபலிங் செய்யப்படாத, பழுதடைந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்த மூன்று உணவு கையாளும் நிறுவனங்களுக்கு எதிராக பொத்துவில் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. அபராதமாக 126000.00 ரூபா விதிக்கப்பட்டதுடன் உரிமையாளர்களும் எச்சரிக்கப்பட்டனர்.
அத்துடன் சுகாதார விதிமுறைகளை மீறிய மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்எஸ்.அப்துல் மலிக் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,