வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - குழப்பத்தில் பொலிஸார்


 இரத்தினபுரி, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் சோடிக்கப்பட்ட கதை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரிடம் சிறுவன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அது புனையப்பட்ட கதையாக இருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த16 ஆம் திகதி மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக குறித்த சிறுவன் தனது சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வெள்ளை வேன்

சுமார் 100 மீட்டர் தூரம் சைக்கிளில் சென்ற பின்னர் அவரது சைக்கிளில் இருந்த சங்கிலி அறுந்து போனதாகவும் கூறப்படுகிறது. அதனை சரிசெய்து சுமார் 700 மீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டி சென்ற போது இறப்பர் தோட்டத்திற்கு அருகில் ஒரு வெள்ளை வேனில் தான் கடத்தப்பட்டதாக, சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சைக்கிளுடன் வேனில் தன்னை கடத்தி சென்றதாகவும் சிறிது தூரம் சென்ற பின்னர் ஒரு பெட்டிக்கடையை கடந்து வாகனம் நின்றவுடன் தான் அதில் இருந்து குதித்து தப்பிச் சென்றதாக மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விடயம் சிறுவனால் பொய்யான வாக்மூலம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்