இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 

2019ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் தனிப்பட்ட முறையில் நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து

சித்திரவதை மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவலுக்கு எதிரான அரசியலமைப்பு பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இரண்டு அதிகாரிகளின் தனிப்பட்ட நிதியில் இருந்து இழப்பீடு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

நகைகளை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட, பெந்தோட்டை, மிரிஸ்வத்தையை தளமாகக் கொண்ட ஒரு மளிகை விநியோக நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்