அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை! அடுத்த எம்.பி கௌசல்யா..


 நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பதவி பறிக்கப்பட்டால் அடுத்ததாக அந்தப் பதவிக்கு சட்டத்தரணி கௌசல்யா  நரேந்திரன்  தெரிவாகுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவியை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா..

இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அர்ச்சுனா எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும், தனக்கு அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளை எடுத்தது சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் என்றும், தனது பதவி இல்லாமலாக்கப்பட்டால்  அந்த இடத்திற்கு கௌசல்யா தெரிவாகுவார் என்று அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.

தான்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்று அர்ச்சுனா எம்.பி சுட்டிக்காட்டினார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்