போர்டோ அணுஉலை மீது இஸ்ரேல் தாக்குதல்


 ஈரானின் போர்டோ அணுஉலை மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


அமெரிக்கா நேற்று  (22) தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

 


அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிற்கு ஆபத்தில்லை என அதிகாரிகளை மேற்கோள்காட்டி தஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 


அத்தோடு ஈரான் தலைநகரில் உள்ள எவின் சிறைச்சாலை மற்றும் துணை இராணுவப் புரட்சிகர காவல்படையின் பாதுகாப்பு தலைமையகம் உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்