இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்! அடுத்த வாரம் முதல் ஸ்டார்லிங்க் சேவை ஆரம்பம்

எலான் மஸ்க்கிற்கு(Elon Musk) சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) அறிவித்துள்ளது.

TRCSL பொது இயக்குநராக பணியாற்றும் ஓய்வுபெற்ற விமான படை அதிகாரி பந்துல ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்டார்லிங்க்

மேலும் தெரிவித்த அவர்,

முதற்கட்டமாக 12 பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சாதனங்கள் இவ்வாரமே விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை மொத்தமாக 112 ஸ்டார்லிங்க் சாதனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

தொடக்கத்தின்போது, TRCSL மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து சேவையின் தரத்தையும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அம்சங்களையும் ஒரு வாரத்துக்குப் பரிசோதனை செய்யவுள்ளனர்.

இந்த பரிசோதனையின் பின், ஸ்டார்லிங்க் தனது வணிகச் சேவைகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும்

பாதுகாப்பு நெருக்கடிகள்

ஸ்டார்லிங்க் நிறுவனம், 2024 ஒகஸ்ட் மாதம், இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தம் செய்து செயற்கைக்கோள் இணைய சேவையை அனுமதித்த பின்னர், ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்றது.


 இந்நிறுவனத்துக்கு எதிராக அதிகாரபூர்வ அரச மட்டங்களில் விமர்சனமும் எழுந்துள்ளது.

கடந்த மே மாதத்தில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஸ்டார்லிங்க் உடன் மேற்கொண்ட ஆரம்ப ஒப்பந்தத்தின்போது தேசிய பாதுகாப்பு நெருக்கடிகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்

இணைய சேவை

அரசாங்கத்திற்கு பயனாளர்களின் தகவல்களைப் பெற முடியாத நிலை, உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் கவலைக்குரியதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்டார்லிங்க், SpaceX நிறுவனத்தால் இயக்கப்படுகிறது மற்றும் நிலத்திலிருந்து குறைந்த தூரத்தில் உள்ள(Low Earth Orbit) ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் மூலம் உயர் வேக இணைய சேவையை வழங்குகிறது.

இது, இணைய வசதியற்ற குறுகிய மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் இந்த சேவை செயலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்