இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர் கைது
அரசாங்க விரோத முறைப்பாடாக இதனை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
வெள்ளவத்தை 33வது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்