குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதேவேளை விமானம் விபத்தில் சிக்கியதாக எயார் இந்தியா நிறுவனம் உறுதிசெய்து பதிவிட்டுள்ளது.
அப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:
அஹமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட எயார் இந்திய AI171 விமானம் இன்று விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிபடுத்துகிறது.
அஹமதாபாத்தில் இருந்து பிற்பகல் 13.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 ரக விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துக்கேய நாட்டவர் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எயார் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.