புதிய இணைப்பு
ஜெருசலேம் மற்றும் டெல் அவீவ் ஆகிய நகரங்களை பாரிய சத்தத்துடன் ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
குறித்த தாக்குதல் இன்றையதினம்(14.06.2025) இஸ்ரேலிய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்க விடப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் தங்குமிடங்களுக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் விதமான அமைச்சரவைக் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றுள்ளது.
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களின் அடுத்த அலை விரைவில் நடத்தப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இதுவரை 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை இதனை 'X' தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, நூற்றுக்கணக்கான பல்வேறு பெலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது
5 பொதுமக்கள் காயம்
அத்துடன், ஈரானின் தீர்க்கமான பதிலடி கொடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் IRNA குறிப்பிட்டுள்ளது.
அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் விழுந்துள்ளன.
இதனால், 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த ஐவரில் நால்வர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.