புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு



 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் முறைகேடான வழிகளில் சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024ம் ஆண்டின் டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் தினத்தை முன்னிட்டு 332 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்திருந்தார்.

எனினும், அன்றையதினம் 389 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் 57 கைதிகள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மேலதிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்

வெசாக் தின பொதுமன்னிப்பு

அதே போன்று கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செயற்பாட்டின் போது 11 கைதிகள் மேலதிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் வெசாக் தின பொதுமன்னிப்பின் கீழ் 388 கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

எனினும், அதரற்கு மேலதிகமாக 26 கைதிகள் ஜனாதிபதியின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்