இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி.. தொடர் அழுத்தத்தில் அநுர அரசாங்கம்


 மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது ஜூலை ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விஜயத்திற்கான உறுதியான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதன்படி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை பயணம்

கடைசியாக, 2016 பெப்ரவரியில், மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது ஜெய்த் ராத் அல் ஹசைன் ஆணையாளராக இலங்கைக்கு வருகைத் தந்தார்.

இந்தநிலையில், 2022 ஒக்டோபரில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்ட ஒஸ்திரிய நாட்டவரான துர்க்கின் இலங்கை பயணம் முக்கியத்தும் மிக்கமாக அமைந்துள்ளது.

சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனித உரிமைகள் கவலைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று இலங்கை அரசாங்கம் தடுமாறும் நிலையில் அவரின் பயணம் அமைகிறது. 




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்