அமெரிக்காவில் காட்டுத் தீ - 700 குடும்பங்கள் வெளியேற்றம்


 அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 



ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய் பகுதியில், நேற்று (11) முதல் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அம்மாகாணத்தின் ஹூத் ஆற்றுக்கும், டல்லஸ் நகரத்துக்கும் இடையிலான 84ஆம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

 



அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளிப்பதால் சுமார் 32 கி.மீ. நீளமுடைய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

 



இதனைத் தொடர்ந்து, ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களின் மூலம் அங்கு பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க, அமெரிக்க தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

 




இந்நிலையில், வடமேற்கு டல்லாஸ் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 1,352 குடும்பங்கள் வெளியேற தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 



வெளியேற்றப்படும் மக்களைத் தங்கவைப்பதற்காக, டல்லாஸ் நகரத்தின் நடுநிலைப்பாடசாலைகள் உட்பட இருவேறு இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்