பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி தடை

 

இந்தியா - பாகிஸ்தான் முரண்பாட்டைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளமையின் காரணமாக, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக வெற்றிலைச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

இந்த சிக்கலுக்கு தீர்வுகாண உறுதியான நாளொன்று இல்லாமையின் காரணமாக விவசாயிகளால் மீண்டும் பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நிலைமை தொடர்பில் விளக்கமளித்த வெற்றிலை செய்கையாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் டபிள்யூ. எல். சரத் சந்திரசிறி, ஆயிரம் வெற்றிலைகள் 25,000 ரூபாவுக்கு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


எது எவ்வாறாயினும் இந்திய பாகிஸ்தான் முரண்பாடு முடிவடையும் வரை பொறுமையாக காத்திருக்க முடியாது என்பதால் இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற பல ஐரோப்பிய நாடுக ளுக்கும் மாலைத்தீவு, மலேசியா போன்ற நாடுகளிலும் வெற்றிலைக்கு பெரும் கேள்வி நிலை எழுந்துள்ளதால் அந்த நாடுகளுக்கு வெற்றிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரியுள்ளார்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்