ஒரு வெள்ளைப் புறா
குடை பிடிக்கின்றது!
அதை !
கொள்ளை மழை
கொஞ்சம் நனைக்கின்றது!
சிறு சாரல் பட
அவள் மேனி தெரிகின்றது!
அட அதைப் பார்த்து
என் நெஞ்சு கொதிக்கின்றது!
வரும் நாளெல்லாம்
விழி மூட மறுக்கின்றது!
மனம் நிலையின்றி
தட தடத்து துடிக்கின்றது!
அவள் உடல் பட்டுத்
தொடும் காற்று இம்சிக்குது!
என் செய்வது
நான் இயல்பாயில்லை!
அந்த தேவதையை
தினம் இரசித்திடவே
மனப் பறவைத்
தன் சிறகுகளை விரிக்கிறது!
சிறு பொழுதாகிலும்
அவளோடுதான்
வாழ்ந்து பின் சாகத்தான்
எண்ணம் விளைகின்றது!