தலைமறைவாகியிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் போலி பத்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்க நிலத்தை விற்பனை செய்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.