சஜித் பிரேமதாசவின் கட்சியில் முடிவெடுப்பது அவரின் மனைவி என்ற தகவல் வெளியாகியுள்ளது என்று எமது தலைமுறை கட்சியின் ஸ்தாபகர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.
நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“வெகுவிரைவில் நாமல் ராஜபக்ச எதிர்கட்சி தலைவராக வருவதற்கு கூட வாய்ப்புள்ளது. சஜித் பிரேமதாச எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து தூக்கியெறிப்படல் வேண்டும்.
அவர் தன்னை ஜனாதிபதியை விட அதிகாரமிக்கவர் என்று கருதி தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றார்.
இவ்வாறு செயற்பட்டால் கட்சி அழிவுநிலையை நோக்கி செல்லும்” என தெரிவித்தார்.