வாகன இறக்குமதி தொடர்பாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி


 வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில், இந்த வர்த்தமானி அறிவிப்பை ஏப்ரல் 29 முதல் அமலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும் பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

 

இது தொடர்பில் விளக்கமளித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே,

 

“ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL புதிய வர்த்தமானி வௌியிட்டதன் காரணமாக, இப்போது அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இதேபோல், இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வரும் ஏனைய வாகனங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.” மேலும் பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்