பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சீரற்ற வானிலை காரணமாக 20 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் நேற்று (25) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பெண்கள், சிறுமிகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு சுமார் 2,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்குள்ள லாகூர், ஷேகுபுரா, நங்கனா சாஹிப், அட்டாக், முல்தான், ராஜன்பூர், ஹபிசாபாத், மியான்வாலி, ஜாங் குஜ்ரன்வாலா, லாயா உள்ளிட்ட நகரங்களில் கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.