தரையிறங்கிய துருக்கிய போர் விமானங்கள்! இராணுவ தளவாடங்களை சேகரிக்கும் பாகிஸ்தான்


 இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக துருக்கி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள தடைகளை தொடர்ந்து போர் பதற்றம் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது

பாகிஸ்தானியர்களின் விசா

பாகிஸ்தானியர்களின் விசாக்கள் இரத்து என ஏராளமான தடைகளை இந்திய மத்திய அரசு விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், எல்லையை ஒட்டிய பகுதிகளில் படைகளை பாகிஸ்தான், குவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் லடாக்கை ஒட்டியுள்ள பென்சி,காஷ்மீரின் ஸ்கார்டு, கைபர் பக்துங்வாவின் ஸ்வாட் என எல்லையில் உள்ள விமானப்படை தளங்களில், எப் -16, ஜே -10, ஜேஎப் - 17 ஆகிய யுத்த விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்