பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் புதிதாக வாய்ச் சுகாதார பிரிவொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வாய்ச் சுகாதார பிரிவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (24) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபீஸ் முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வாய்ச் சுகாதார பிரிவினை திறந்து வைத்தார்.
இதன் போது பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறுக், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ,எம்.மாஹிர், திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எஸ்.எம்.ஷாபி, பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌஷாத், தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத், பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ.ஹபீப் முஹம்மட், கணக்காளர் திருமதி உசைனா பாரிஸ், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், பிராந்திய மருந்தாளர் திருமதி எஸ்.இந்திரக்குமார் உள்ளிட்ட சுகாதார மற்றும் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை பிராந்திய பணிப்பாளர் குறித்த பாடசாலையின் சிற்றூண்டிச்சாலைக்கும் விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்டார்.