எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் படி, இன்று (30) நள்ளிரவு முதல், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 6 ரூபாவாலும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றருக்கு 20 ரூபாவாலும், டீசல் லீற்றருக்கு 12 ரூபாவாலும், சூப்பர் டீசல் லீற்றருக்கு 6 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 5 ரூபாயாலும் குறைக்கப்படும் என இலங்கை பெற்றோல் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.