மாத்தறை தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோயிலுக்கு முன்பாக உள்ள சமீபத்தில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தர பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (07) இரண்டு வழக்கறிஞர்களுடன் சந்தேகநபர்கள் முன்னிலையான பின்னர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது
குறித்த சந்தேக நபர்கள் 26 மற்றும் 35 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 21 ஆம் திகதி, தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் இரவு 11.45 மணியளவில், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
வானில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், T-56 மற்றும் இரண்டு 9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கி சூடு
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து வீடு திருப்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் ஒரு பக்க வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வான் தீ வைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது