மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு..


 சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இல்லாததால், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹட்டன் பகுதியில் உள்ள காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அதனை குறிப்பிட்டுள்ளனர். 

இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 100 ரூபா சில்லறை விலையில் விற்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்திரை புத்தாண்டு 

அதேவேழளை, ஒரு கிலோ சர்க்கரை வள்ளிக் கிழங்கு 600 ரூபாய், ஒருகிலோ கரட் 400 ரூபா, நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோ 600 ரூபா, ஒரு கிலோ தக்காளி 800 ரூபா எனவும் விற்கப்படுகின்றது. 

அத்துடன், மற்ற அனைத்து மரக்கறிகளும் 200 ரூபாவுக்கு இடைப்பட்ட சில்லறை விலையில் விற்கப்படுகின்றன.

மேலும், தேங்காய் ஒன்று 100 ரூபா முதல் சில்லறை விலையில் விற்கப்படுகிறது. புளிப்பு மற்றும் சர்க்கரை வாழைப்பழங்கள் ரூ.220க்கும் விற்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையும் இந்த திடீர் மரக்கறி விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்