பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்


 நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர் மனோஜ் குமார்(87) . இவர் இந்திய தேசப்பற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்திருப்பதால் 'பாரத் குமார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.


இவரின் 'புரப் அவுர் பஸ்சிம்' படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. யாத்கார், பெஹ்சான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்டவைகள் இவரின் சிறந்த படங்களாகும்.


இவ்வாறு தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் கடந்த 1992-ல் பத்மஸ்ரீ விருதையும், 2015-ல் இந்திய சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார்.


இதற்கிடையில், உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 21-ம் திகதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று அதிகாலை 4.03 மணியளவில் மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்