இந்திய மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு - வக்பு மசோதா நிறைவேற்றம்


 வரை விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்படுமென்றும் கூறப்படுகிறது.


அம்சங்கள் என்னென்ன?:


 வக்பு தீா்ப்பாயங்கள் வலுப்படுத்தப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட தோ்வு நடைமுறை பராமரிக்கப்படும். வக்ஃப் வாரியங்களுக்கு வக்ஃப் அமைப்புகளால் வழங்கப்படும் கட்டாய பங்களிப்பு 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்பு அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும்.


வக்பு சொத்து மேலாண்மையில் திறன்-வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மையப்படுத்தப்பட்ட வலைதளம் உருவாக்கப்படும்.


இஸ்லாத்தை ஏற்று பின்பற்றுவோா் (குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்) மட்டுமே தங்களின் சொத்துகளை வக்பு -க்கு அா்ப்பணிக்க முடியும்.


வக்பு நன்கொடைக்கு முன்பாக நன்கொடையாளரின் பெண் வாரிசுதாரா்களுக்கு சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.


அரசு சொத்துகள் வக்பு சொத்தாக உரிமை கோரப்பட்டால் மாவட்ட ஆட்சியருக்கு மேற்பட்ட அந்தஸ்து கொண்ட அதிகாரி விசாரிப்பாா். பிரச்னை எழும் பட்சத்தில், அரசு உயரதிகாரியே இறுதி முடிவெடுப்பாா் (இப்போது வக்பு தீா்ப்பாயங்கள் முடிவெடுக்கின்றன).


மத்திய-மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவா் ஆகிய அம்சங்கள் மசோதாக்களில் இடம்பெற்றுள்ளன.


முன்னதாக, மக்களவையில் கடந்த ஒகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பாஜக எம்.பி. ஜக தாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்