துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும்

 துடுப்பாட்டம்

விளையாட்டு

துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே பதினொன்று வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாபாக்கித்தான்இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வுஒருநாள்பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும்


துடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனதம் பதினொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு அடிப்படையில் விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100-க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றுள்ளன.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்