ஆழமாய்
பயமுறுத்திவிடுகிறது...
நம்மைத்தாண்டி,
நமக்கு
அருகில்
இருப்பவரை
தொட்டுவிட்ட
மரணம்...
உறவை
பறிகொடுத்துவிட்ட,
உண்மையான
கண்ணீர் துளிகளின்
செழிப்பில்,
அது
மிடுக்காய்
மலர்ந்திருக்கிறது...
நடுங்கும்
கரங்களின்,
கடைசி
மாலைகளை,
திமிராக
தலை நிமிர்ந்து
ஏற்றுக்கொள்கிறது..
உச்சகட்ட உணர்வோடு
கட்டி அழுத அந்த கைகளில்,,
ஒரு வாழ்க்கையை
மொத்தமாய்
தின்றுமுடித்த
தனது உதடுகளை,
இரக்கமின்றி
துடைத்துக்கொள்கிறது...
பின்னிருந்து
கெஞ்சும்
குரல்களை
கண்டுகொள்ளாமல்..
அது
தூக்கிச்செல்ல வந்த
நான்கு தோள்களிலும்,
ஆசையாய்
அமர்ந்துகொள்கிறது..
தோற்றுப்போன
மனிதக்கூட்டத்தின்
தொங்கிய தலைகளுக்கு
மத்தியில்,,,
கம்பீரமாய் அது
பயணிக்கிறது,
நிரந்தர வெற்றியோடு....!!!
கவிதை மொழியன்....