ஹமாஸ் படைகளை மீளப்பெறவேண்டும் : இஸ்ரேல் நிபந்தனை
காஸாவில் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீடிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியிலிருந்து ஹமாஸ் அமைப்பு தங்களது படைகளை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேலின் வெளியுறவுத் துறையமைச்சா் கூறுகையில்,
‘போர் நிறுத்த நீடிப்புப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் காஸா பகுதி படைகளற்ற பகுதியாக மாற்றப்பட வேண்டும்’ என்றார்.
எனினும், ‘காஸா அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பிடமோ பிற போராட்டக்குழுக்களிடமோ கூறுவது எல்லை மீறிய நிபந்தனை’ என்று ஹமாஸ் அமைப்பின் தலைவா் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ்இடையேபோர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் விதித்துள்ள நிபந்தனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.