வாழ்வின் சுவை
*******************
ஈருடல் ஓருயிராகி இன்ப
விளைச்சல்வாழ்வின் சுவை தான் வாழ்க்கை
கருவாகி உருவாகி பிறந்தப்
பிணி தானே மனிதவாழ்வு !
இன்பத்தில் விளைந்து துன்பத்தை
அறுவடை செய்யும் செங்கரும்பு
வெட்டி நட்டாலும் தழைக்கும்
துளிர் வந்து உரசியரிக்கும்!
இந்த உணவு வேண்டாம்
அந்த உணவு வேண்டாம்
மலையென சொத்திருந் தென்ன
இனிப்பு உண்ண முடியாதே!
இனிப்போ கசப்போ நதியென
ஓடிக் கொண்டிரு பிறர்க்கு
உதவினால் உனக்கே பேரின்பம்
கடன்காரன் போலே மரணம் !
வந்து இடைமறிக்கும் ஏற்றிடு
பிறவாதிருத் தலே சுவையாம்
அறுசுவை விருந்தன்று வாழ்வு
மற்றவர்க்காய் வாழ்தலே சுவை.!
செல்வம் பெரியசாமி
தமிழ்நாடு நாமக்கல்