முதன் முதலாக
நீ என்னிடம்
காதல் என்று
மொழிந்த பொழுது
நான் அய்யயோ ...
கெட்டவார்த்தை என்றவள்.
காலங்கள் பல கடந்து தானடா
எனக்கு விளங்குகிறது.
அது , கெட்ட வார்த்தையுமல்ல
கேட்ட வார்த்தையுமல்ல
நான் அறிந்தே தவறவிட்ட
ஆறாத வடு என்று..!
செல்வம் பெரியசாமி